இந்தியா

தடுப்பது யார்? ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷாவுக்கு பிரியங்கா சதுர்வேதி கேள்வி

Published On 2023-12-07 11:31 IST   |   Update On 2023-12-07 11:31:00 IST
  • ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • அமித் ஷா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசினார்.

ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு மற்றும் மறுசீரமைப்பு (திருத்தம்) 2023 மசோதாக்கள் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின்போது மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா "ஜம்முவில் 37 இடங்கள் இருந்தன. தற்போது 43 இடங்களாக அதிகரித்துள்ளன. முன்னதாக காஷ்மீரில் 46 இடங்கள் இருந்தன. தற்போது 47 இடங்களாக அதிகரித்துள்ளன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நம்முடையது என்பதால் 24 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன" எனக் கூறியதாக செய்திகள் வெளியானது.

இதற்கு பதில் அளித்த உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி "அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும். அவர்களை யார் தடுத்து வைத்துள்ளார்கள்?. நம்முடைய ராணுவம் பலம் வாய்ந்தது. பாகிஸ்தான் சூழ்நிலை தற்போது பலவீனமாக உள்ளது. தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற வேண்டும். அதன்பின் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் அதற்கு முன் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகம் நிலவ அனுமதிக்க வேண்டும்" என்றார்.

Tags:    

Similar News