இந்தியா

தாய் - தந்தையை டிராக்டர் ஏற்றிக் கொலை செய்த கொடூர மகன்

Published On 2025-04-27 14:50 IST   |   Update On 2025-04-27 14:50:00 IST
  • அந்த நிலத்தை டிராக்டர் மூலமாக சமப்படுத்தும் பணியில் ராஜசேகர் ஈடுபட்டார்.
  • அப்போது அங்கு வந்த பெற்றோர், அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி அப்பலநாயுடு-ஜெயம்மா. இவர்களது மகன் ராஜசேகர்.

இவர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தை ராஜசேகர் விற்க விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை அந்த நிலத்தை டிராக்டர் மூலமாக சமப்படுத்தும் பணியில் ராஜசேகர் ஈடுபட்டார்.

அப்போது அங்கு வந்த பெற்றோர், அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மகன் ராஜசேகர், பெற்றோர் என்றும் பார்க்காமல் அப்பலநாயுடுவையும், ஜெயம்மாவையும் டிராக்டரை ஏற்றி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

சொத்து தகராறில் நடந்த இந்த பயங்கர சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News