இந்தியா

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரோகித் பவார் ஆஜர்

Published On 2024-01-24 05:41 GMT   |   Update On 2024-01-24 06:33 GMT
  • மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன்.
  • அமலாக்கத்துறை அலுவலகம் வரை சுப்ரியா சுலே உடன் சென்றார்.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ரோகித் பவார். இவர் சரத் பவார் குடும்பத்தைச் சேர்ந்தவர். மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏ.-வாகவும் உள்ளார்.

மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக அலுவலகத்தில் இன்று ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் ரோகித் பவாருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

அதன்படி இன்று காலை ரோகித் பவார் மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் சரத் பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே உடன் சென்றார். அமலாக்கத்துறை அலுவலகம் வரை சென்ற அவர், ரோகித் பவார் கையில் அரசியலமைப்பு நகலை வழங்கினார். ரோகித் பவார் அலுவலகம் உள்ளே சென்ற நிலையில், உண்மையே வெல்லும் என சுப்ரியா சுலே தெரிவித்தார்.

தெற்கு மும்பையில் இருந்து நூற்றுக்காணக்கான தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அமலாக்கத்துறை அலுவலகம் முன் கூடியிருந்தனர். ரோகித் பவாருக்கு ஆதராவாக முழக்கமிட்டனர். அமலாக்கத்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News