இந்தியா

லடாக்கில் மிதமான நிலநடுக்கம் - 4.5 ரிக்டர் அளவில் பதிவு

Published On 2023-06-17 23:31 IST   |   Update On 2023-06-17 23:35:00 IST
  • யூனியன் பிரதேசமான லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.

லடாக்:

யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று இரவு 9.44 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இது லடாக்கில் இருந்து 271 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இதேபோல், இரவு 9.55 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

Tags:    

Similar News