இந்தியா
இந்தியா- பாகிஸ்தான் உறவு மேம்படும் வரை ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் ஓயாது: பரூக் அப்துல்லா
- என்கவுண்டர் நடைபெற்று கொண்டிருக்கும்போது, பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளது என்று உங்களால் எப்படி கூற இயலும்.
- பாகிஸ்தான் உடனான உறவு மேம்படும் வரை பயங்கரவாதம் ஓயாது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படும் வரை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதம் ஓயாது என தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மேலும், குல்காம் மாவட்டத்தில் என்கவுண்டர் நடைபெற்று வருவது குறித்து கேட்ட கேள்விக்கு "என்கவுண்டர் நடைபெற்று கொண்டிருக்கும்போது, பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ளது என்று உங்களால் எப்படி கூற இயலும்" என்றார்.