இந்தியா

இறந்த மனைவியின் ஆசையை நிறைவேற்ற இந்தியா வந்த நபர்- விமான விபத்தில் சிக்கி பலியான சோகம்

Published On 2025-06-13 20:58 IST   |   Update On 2025-06-13 21:08:00 IST
  • விமான விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
  • விடுதியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல்.

அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் பி.ஜே. மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், விடுதி மற்றும் விடுதி அருகில் இருந்தவர்களும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

விடுதியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விமான விபத்தில் சிக்கியவர்கள் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு காரணத்திற்காக பயணம் மேற்கொண்டனர். இதில், உயிரிழந்த ஒவ்வொரு உயிருக்கும் உருக்கமான கதைகளும் இருந்திருக்கிறது.

அந்த வகையில், பிரிட்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியுடன் குஜராத் வந்த அர்ஜூன் மறுபாய் என்பவர் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தனது மனைவியின் ஆசைப்படி அஸ்தியை நர்மதா ஆற்றில் கரைத்துவிட்டு விமானத்தில் ஏறியவர் விபத்தில் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News