விடிய விடிய சித்ரவதை: மருமகனை கம்பத்தில் கட்டி வைத்து அடி வெளுத்து வாங்கிய மாமியார்
- ஒரு ஆண்டு ஆகியும் கணவர் வீட்டிற்கு வரவில்லை.
- வாலிபரை கம்பத்தில் கட்டி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜலந்தர் பாலியர் சிங். இவரது மனைவி சுபத்ரா மல்பிசோ. கடந்த ஆண்டு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது பாலியர் சிங் தனது மனைவியை கடுமையாக தாக்கினார். இதுகுறித்து சுபத்ரா தனது தாயாரிடம் தெரிவித்தார். அவர் தனது உறவினர்களுடன் வந்து பஞ்சாயத்தை கூட்டினார்.
அப்போது ஊர் பெரியவர்கள் சுபத்ராவை அவரது தாய் வீட்டிற்கு சென்று சில மாதங்கள் தங்கி இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதன்படி சுபத்ரா தாய் வீட்டிற்கு சென்றார். ஒரு ஆண்டு ஆகியும் கணவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது கணவர் மனைவி மனமிறங்கி தனது வீட்டிற்கு வருவார் என ஆவலுடன் காத்திருந்தார். மனைவி வராததால் அவரை அழைத்து வர நேற்று முன்தினம் பாலியர் சிங் மாமியார் வீட்டிற்கு சென்றார்.
மருமகன் மீது கடும் கோபத்தில் இருந்த மாமியார் அவரை சரமாரியாக தாக்கினார். பாலியர் சிங் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட சுபத்ராவின் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்களும் பாலியர் சிங்கை கண்மூடித்தனமாக தாக்கினார்.
பாலியர் சிங் வலி தாங்க முடியாமல் கதறினாலும் ஒருவர் பின் ஒருவராக தாக்கிக் கொண்டே இருந்தனர்.
பின்னர் அவரை அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து அடி வெளுத்து வாங்கினர். விடிய விடிய பாலியர் சிங்கை மின்கம்பத்திலேயே கட்டி வைத்திருந்தனர்.
கிராம மக்கள் வேடிக்கை பார்த்தனர். யாரும் மீட்கவில்லை. சினிமா காட்சியை மிஞ்சும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாலியர் சிங்கை மீட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து பாலியர் சிங்கின் மனைவி, மாமியார் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரை கம்பத்தில் கட்டி தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.