இந்தியா

ரெயிலில் பிஸ்கட் கொடுத்த பயணியின் உருவப்படத்தை வரைந்து கொடுத்த ஓவியர்

Published On 2023-09-20 15:59 IST   |   Update On 2023-09-20 15:59:00 IST
  • வீடியோவில் தேஜஸ் ஒரு ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.
  • வீடியோவை பார்த்த பயனர்கள் உணர்ச்சிகரமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ரெயில் பயணங்களின் போது பயணிகள் தங்களுடன் பயணிக்கும் சக பயணிகளுக்கு தாங்கள் வைத்திருக்கும் உணவு, தின்பண்டங்களை கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் அவ்வாறு பிஸ்கட் கொடுத்த ஒரு வாலிபருக்கு பரிசாக அவரது உருவப்படத்தை வரைந்து கொடுத்து அசத்தி உள்ளார் ஓவியர் ஒருவர்.

இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. தேஜஸ் என்ற அந்த ஓவியர் தனது பக்கத்தில் பகிர்ந்த அந்த வீடியோ 1.3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் தேஜஸ் ஒரு ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது ரெயிலில் பயணித்த இளம் வாலிபர் அவருக்கு பிஸ்கட் கொடுக்கிறார். அதை பெற்றுக்கொண்ட தேஜஸ், அவருக்கு ஏதாவது பரிசளிக்க முடிவு செய்தார்.

அதன்படி தனது ஓவிய திறமையால், பிஸ்கட் கொடுத்த பவாஸ் என்ற பயணியின் உருவப்படத்தை அச்சு அசலாக வரைந்து அவரிடம் கொடுத்தார். அதைப்பார்த்த பயணி மிகவும் மகிழ்ச்சி அடைந்து தேஜசுக்கு கை கொடுத்து பாராட்டியதோடு, அந்த ஓவியத்தை நான் பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன் என்றார்.

இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் உணர்ச்சிகரமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News