இந்தியா

உச்சகட்ட கவர்ச்சியுடன் தீபிகா படுகோன் பாடல் காட்சி... எச்சரிக்கை விடுத்த மத்திய பிரதேச உள்துறை மந்திரி

Published On 2022-12-14 18:46 IST   |   Update On 2022-12-14 18:46:00 IST
  • பதான் படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • பேஷ்ரம் ரங் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

போபால்:

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் முதல் பாடல் 'பேஷ்ரம் ரங்' வெளியாகியுள்ளது. முதல் பாடலைப் பார்த்ததும், சமூக வலைத்தளங்களில் வந்துள்ள விமர்சனங்களை பார்க்கும்போது பதான் 2023-ம் ஆண்டின் பெரிய படம் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் இந்த பாடல் 1.9 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக தீபிகா படுகோன் 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நீச்சல் உடையில், தீபிகா படுகவர்ச்சியாக நடித்து உள்ளார். தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.

மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடல் காட்சியின் காஸ்ட்யூமுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருக்கும் பிகினி உடையானது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இந்த பாடலானது அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. பேஷ்ரம் ரங் பாடலின் வரிகள் மற்றும் பாடல் காட்சிக்கான உடைகள் திருத்தப்பட வேண்டும். இல்லையெனில் மாநிலத்தில் படத்தை திரையில் வெளியிட அனுமதிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்யும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார். #BoycottPathan என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Tags:    

Similar News