இந்தியா

கர்ணி சேனா தலைவர் சரமாரி குத்திக்கொலை... பொதுமக்கள் முன்னிலையில் நடந்த பயங்கரம்

Published On 2022-09-04 19:49 IST   |   Update On 2022-09-04 19:49:00 IST
  • கர்ணி சேனா தலைவர் ராஜ்புத் கொலையில் சம்பந்தப்பட்ட 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
  • கத்தியால் குத்தப்படும் கொடூர காட்சியை அங்கிருந்த ஒருவர் கேமராவில் பதிவு செய்துள்ளார்.

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் இட்டர்சி நகரத்தில் கர்ணி சேனா தலைவர் பொதுமக்கள் முன்னிலையில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

கர்ணி சேனா அமைப்பின் நகர செயலாளரான ரோகித் சிங் ராஜ்புத், வெள்ளிக்கிழமை இரவு நகராட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள டீக்கடை அருகே தனது நண்பர் சச்சின் பட்டேலுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவர்களிடம் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பைக்கில் வந்த நபர்களில் ஒருவன் கத்தியை எடுத்து ரோகித் சிங் ராஜ்புத்தை சரமாரியாக குத்தினான். தடுக்க முயன்ற நண்பருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய ராஜ்புத் உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ராகுல் ராஜ்புத், அன்கிட் பட், ஐஷூ மால்வியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜ்புத் கத்தியால் குத்தப்படும் கொடூர காட்சியை தொலைவில் நின்றிருந்த ஒருவர் கேமராவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News