இந்தியா

ஜாமீன் நிபந்தனை தளர்வில் கேரளாவுக்கு வந்த மதானி ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2023-07-25 05:54 GMT   |   Update On 2023-07-25 05:54 GMT
  • உச்சநீதிமன்றம் மதானிக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு வழங்கியது.
  • உடல்நிலை மோசமடைந்ததால் மீயன்னூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

திருவனந்தபுரம்:

பெங்களூருவில் 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி. இவர் தனது உடல்நலம் பாதித்த தந்தையை பார்ப்பதற்காகவும், கேரளாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மதானிக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு வழங்கி, அவர் கேரளாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடந்த 20-ந்தேதி கேரளாவுக்கு வந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மீயன்னூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News