இந்தியா

அடேங்கப்பா..! இன்னும் 5 கோடி வழக்குகளா ?- மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் விளக்கம்

Published On 2023-12-15 14:31 GMT   |   Update On 2023-12-15 14:31 GMT
  • மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
  • உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட பலம் 34 நீதிபதிகள் ஆவர்.

உச்சநீதிமன்றத்தில் 80,000 வழக்குகள் உட்பட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் ஐந்து கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், "டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள 5,08,85,856 வழக்குகளில், 61 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் 25 உயர் நீதிமன்றங்களில் உள்ளன.

மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 4.46 கோடி வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்திய நீதித்துறையின் ஒட்டுமொத்த அனுமதிக்கப்பட்ட பலம் 26,568 நீதிபதிகள். உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட பலம் 34 நீதிபதிகள் ஆகவும், உயர் நீதிமன்றங்களின் அனுமதிக்கப்பட்ட பலம் 1,114 ஆகவும் உள்ளது.

மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 25,420 நீதிபதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News