இந்தியா

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூர் பயணம்

Published On 2022-11-26 01:03 GMT   |   Update On 2022-11-26 01:03 GMT
  • சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் டிசம்பர் 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது.
  • லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, சிறுநீரக தானம் செய்கிறார்.

புதுடெல்லி

ராஷ்டிரீய ஜனதாதள கட்சி நிறுவனர் லாலுபிரசாத் யாதவ் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரகம் பழுதடைந்ததால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டார். கோர்ட்டும் அனுமதி அளித்தது.

சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் டிசம்பர் 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது. லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, சிறுநீரக தானம் செய்கிறார். இதற்காக லாலுபிரசாத் யாதவ், இன்று (சனிக்கிழமை) சிங்கப்பூர் செல்வார் என்று தெரிகிறது.

லாலுவுடன் அவருடைய மூத்த மகள் மிசா பாரதி, மருமகன் சைலேஷ்குமார் ஆகியோர் செல்ல டெல்லி தனிக்கோர்ட்டு நீதிபதி எம்.கே.நாக்பால் அனுமதி அளித்துள்ளார். மிசா பாரதி, சைலேஷ்குமார் ஆகியோர் மீது ரூ.1 கோடியே 20 லட்சம் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, கோர்ட்டு விதித்த நிபந்தனைகளுடன் இருவரும் சிங்கப்பூர் செல்கிறார்கள்.

Tags:    

Similar News