இந்தியா

நிபா மிரட்டல்: சபரிமலை பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உயர்நீதிமன்றம் வலியுறுத்தல்

Published On 2023-09-16 01:10 GMT   |   Update On 2023-09-16 03:08 GMT
  • கோழிக்கோட்டில் ஆறு பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
  • இரண்டு பேர் உயிரிழந்துள்ளதால் மத்தியக் குழு ஆய்வு

கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. நிபா வைரஸ் குறித்து மத்திய குழு கேரளாவில் ஆய்வு செய்து வருகிறது.

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு மாநில அரசுக்கு கேரள மாநில உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு ஆணையர், சுகாதார செயலாளருடன் ஆலோசனை நடத்தி இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒவ்வொரு கேரள மாதத்தின் ஐந்து நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்படும். அந்த வகையில் நாளை நடை திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News