இந்தியா

திருப்பதி கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கருணாகர் ரெட்டி நியமனம்

Published On 2023-08-06 04:21 GMT   |   Update On 2023-08-06 04:21 GMT
  • தமிழகத்தில் இருந்து அறங்காவலர் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  • கருணாகர் ரெட்டி ஏற்கெனவே ராஜசேகரரெட்டி ஆட்சியின் போது திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவியை வகித்துள்ளார்.

திருப்பதி:

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவி, அவரது சித்தப்பாவான ஒய்.வி.சுப்பா ரெட்டிக்கு வழங்கப்பட்டது.

அவர் தொடர்ந்து 2-வது முறையாக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் நாளை மறுநாள் நிறைவடைகிறது.

இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. கருணாகர் ரெட்டி, புதிய அறங்காவலர் குழு தலைவராக நேற்று அறிவிக்கப்பட்டார்.

கருணாகர் ரெட்டி ஏற்கெனவே ராஜசேகரரெட்டி ஆட்சியின் போது திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவியை வகித்துள்ளார்.

மேலும் உள்ளூர்காரர் என்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என கருதப்படுகிறது. வரும் 16-ந் தேதிக்குள், அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமனம் செய்வது குறித்து முதல்வர் ஜெகன் ஆலோசித்து வருகிறார்.

இதில் தமிழகம், கர்நாடகம், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரையின் பேரின் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து அறங்காவலர் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பதியில் நேற்று 81,472 பேர் தரிசனம் செய்தனர். 34,820 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News