இந்தியா

கர்நாடகாவில் மசூதி முன்பு காவிக் கொடி கட்டிய இந்து அமைப்பினர்- தட்டிக்கேட்டதால் மோதல்

Published On 2022-11-09 19:25 IST   |   Update On 2022-11-09 19:25:00 IST
  • இந்து அமைப்பினர் அப்பகுதியில் அனைத்து சாலைகளிலும் காவி கொடிகளை கட்டி இருந்தனர்.
  • மோதலைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிருங்கேரி:

கர்நாடகாவில் மசூதி முன்பு இந்து அமைப்பினர் காவிக்கொடி ஏற்றிய விவகாரத்தால் மோதல் ஏற்பட்டது. கர்நாடகா மாநிலம், சிருங்கேரி பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் முன்பாக நேற்று இரவு இந்து அமைப்பினர் சிலர் காவி கொடி தோரணம் கட்டி, காவி கொடியையும் ஏற்றியுள்ளனர். இதைப் பார்த்த இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தட்டிக் கேட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலில் முடிந்தது.

பாபாபுடங்கிரி யாத்திரையை முன்னிட்டு இந்து அமைப்பினர் அப்பகுதியில் அனைத்து சாலைகளிலும் காவி கொடிகளை கட்டி இருந்தனர். மசூதிக்கு வெளியே உள்ள சாலையில் காவி கொடிகள் கட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். மேலும் இரு தரப்பினரிடையே போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Tags:    

Similar News