இந்தியா

இடது: 2023இல் 296 பேர் உயிரிழந்த ஒடிசா ரெயில் விபத்து, வலது: குணால் கம்ரா

2023-இல் ரெயில் விபத்துகளில் 22,000 பேர் பலி என கூறிய கம்ரா.. 21,803 பேர் மட்டுமே இறந்ததாக ரெயில்வே விளக்கம்

Published On 2025-11-21 19:54 IST   |   Update On 2025-11-21 22:52:00 IST
  • ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு பாடிய பாடல் மூலம் குறிவைக்கப்பட்டார்.
  • ரெயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமாக உண்மை சரிபார்ப்பு அறிக்கை பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல 'ஸ்டாண்டு அப்' காமெடியன் குணால் கம்ரா மும்பையில் கடந்த மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு பாடிய பாடல் மூலம் குறிவைக்கப்பட்டார்.

இந்த சர்ச்சை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் அண்மையில் தனது யூடியூப் சேனலில் ரெயில்வே துறை குறித்து பேசிய குணால் கம்ரா, 2023 ஆம் ஆண்டில் சுமார் 25,000 ரெயில் விபத்துகளில் சுமார் 22,000 பேர் இறந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்கள் கூறுவதாக தெரிவித்தார். 

அவரின் கூற்று குறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமாக உண்மை சரிபார்ப்பு அறிக்கை பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரெயில்வே வெளியிட்ட உண்மைச் சரிபார்ப்பில், 2023 ஆம் ஆண்டில் சுமார் 25,000 விபத்துகள் நடந்ததாக கூறப்படுவது தவறானது, அந்த ஆண்டில் நடந்த உண்மையான விபத்துகளின் உண்மையான எண்ணிக்கை 24,678 ஆகும். அதேபோல், 22,000 இறப்புகள் என்ற கூற்றுக்கு மாறாக, 21,803 இறப்புகள் மட்டுமே பதிவாகி உள்ளது என தெளிவுபடுத்தியது.

இந்த தெளிவுபடுத்தல் இணையத்தில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. ரெயில்வேயின் அறிக்கைக்கு உடனடியாக பதிலளித்த காம்ரா, தான் கூறியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த தெளிவுபடுத்தல் இணையத்தில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. ரெயில்வேயின் அறிக்கைக்கு உடனடியாக பதிலளித்த காம்ரா, தான் கூறியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி உள்ளார்.

2023 இல் நடந்து மிக மோசமான ரெயில் விபத்து ஒடிசாவில் நிகழ்ந்தது. ஜூன் 2 அன்று பாலசோர் மாவட்டத்தில் பஹானாகா பஜார் ரெயில் நிலையம் அருகே மூன்று ரெயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிக்னல் பிழை காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

Similar News