கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
- நேஹாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் நேஹா. தன் கணவர் நாகேஷ்வருடன் சொந்த கிராமத்தில் வசித்து வந்தார். இருவருக்கும் திருமணம் முடிந்த நாளில் இருந்து மனஸ்தாபம் இருந்து வந்துள்ளது. ஒருவரை ஒருவர் விரும்பாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். நேஹா விவகாரத்து கேட்டும் நாகேஷ்வர் மறுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேஹாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜிதேந்திரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று நாகேஷ்வருக்கு அதிகளவில் மதுவாங்கி கொடுத்து நேஹாவும் ஜிதேந்திராவும் கழுத்தை நெரித்து அவரை கொைல செய்தனர்.
பின்னர் நாகேஷ்வர் உடலை பைக்கில் 25 கி.மீ. தூரம் கொண்டு சென்று விபத்தில் அவர் இறந்தது போல் சித்தரிக்க திட்டமிட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ளவர்கள் சாலையோரம் கிடந்த பிணத்தை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் நேஹாவும், ஜிதேந்திராவும் போலீசில் சிக்கினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.