இந்தியா

அரிய வகை நோய் பாதிக்கப்பட்டு கை விரல்கள் சிதைந்த பெண்ணுக்கு ஆதார் கார்டு

Published On 2023-12-07 10:52 GMT   |   Update On 2023-12-07 10:52 GMT
  • ஜோசிமோளின் நிலை குறித்து மாவட்ட கலெக்டர் விக்னேஸ்வரி அறிந்தார்.
  • மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மற்றும் கலெக்டர் விக்னேஸ்வரி ஆகியோர் ஜோசிமோளுக்கு ஆதார் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுத்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குமாரகம் புத்தன்பரம்பு பகுதியை சேர்ந்தவர் ஜோசிமோள். அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட இவர் பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.

அரிய வகை நோய் பாதித்த ஜோசிமோளின் 2 கை விரல்களும் சிதைந்தன. இதனால் கை விரல்கள் இல்லாமலேயே வாழ்ந்து வந்தார். கை விரல்கள் இல்லாததால் அவருக்கு ஆதார் கார்டு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவருக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள் கிடைக்கவில்லை.

உடல்நலம் பாதித்து படுத்த படுக்கையாக இருந்த நிலையில், அரசால் கிடைக்க வேண்டிய உதவி எதுவும் கிடைக்காததால் ஜோசிமோள் மன உளைச்சலுக்கு ஆளானார். ஜோசிமோளின் இந்த நிலை குறித்து மாவட்ட கலெக்டர் விக்னேஸ்வரி அறிந்தார்.

மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் மற்றும் கலெக்டர் விக்னேஸ்வரி ஆகியோர் ஜோசிமோளுக்கு ஆதார் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள், ஜோசிமோளின் வீட்டிற்கு சென்று சிறப்பு பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி ஆதார் கார்டுக்கு தேவையானவற்றை பதிவு செய்தனர்.

இதனால் ஜோசிமோள் ஆதார் கார்டு பெறுவதற்கான சிக்கல் தீர்ந்தது. அவருக்கு ஆதார் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு அவர் ஆதார் கார்டை பெற உள்ளார். இதன் மூலம் அரசு வழங்கக்கூடிய உதவிகள் அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News