இந்தியா

ஜியோ 5ஜி சேவை

இந்தியாவின் 4 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை தொடக்கம்

Published On 2022-10-05 00:04 GMT   |   Update On 2022-10-05 00:04 GMT
  • கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 5ஜி சேவையைத் தொடங்கி வைத்தார்.
  • சோதனை அடிப்படையில் 4 நகரங்களில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளது.

புதுடெல்லி:

ஐந்தாம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் 4 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது.

மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் இன்று முதல் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது. மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 4 நகரங்களில் ஜியோவின் ட்ரு 5G பீட்டா சேவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும். 5 ஜி சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News