இந்தியா

10 நாட்களுக்கு சர்வதேச அந்தஸ்தை பெற்ற ஜாம்நகர் விமான நிலையம்

Published On 2024-03-02 05:48 GMT   |   Update On 2024-03-02 05:48 GMT
  • ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சென்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிக்கு உலகத் தலைவர்கள் வருகை.
  • நேரடியாக ஜாம்நகருக்கு வருகை தரும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்ட்-க்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.

திருமணத்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 3-ந்தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடத்த முகேஷ் அம்பானி- நீடா தம்பதி முடிவு செய்தது.

இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உலகத் தலைவர்கள் பெரும்பாலானோருக்கு முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதி அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் உலக தொழில் அதிபர்கள் பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், பாப் பாடகி ரிஹான்னா உள்ளிட்டோர் ஜாம்நகருக்கு வருகை தந்தனர்.

அவர்கள் விமானம் நேரடியாக ஜாம்நகருக்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய முகேஷ் அம்பானி முடிவு செய்தார். இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்கள் சர்வதேச அஸ்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வெளிநாட்டில் இருந்து வரும விமானங்கள் ஜாம்நகர் விமான நிலையத்தில் தரையிறங்க முடியும். அதேபோல் ஜாம்நகரில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் புறப்பட்டு செல்ல முடியும்.

பிப்ரவரி 25-ந்தேதி முதல் மார்ச் 5-ந்தேதி வரை இந்த அனுமதி வழங்கப்பட்ட்ளது. வழக்கமாக சுமார் ஆறு விமாங்கள் வந்து செல்லும் நிலையில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து சென்றதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News