இந்தியா

Mouse, Keyboard-ஐ 5 நிமிடங்களுக்கு மேல் தொடவில்லை என்றால்.. ஊழியர்கள் மீது பிடியை இறுக்கும் ஐ.டி.நிறுவனம்

Published On 2025-11-18 05:56 IST   |   Update On 2025-11-18 05:56:00 IST
  • 15 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், ஊழியர் மற்ற வேலைகளில் பிஸியாக இருப்பதாக கருதப்படுகிறார்.
  • பதவி உயர்வு மற்றும் போனஸ் போன்ற விஷயங்களை தீர்மானிக்க பயன்படுத்தப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

ஐடி நிறுவனமான COGNIZANT தனது ஊழியர்கள் பணி செய்கிறார்களா என்பதை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது.

இதற்காக, 'ProHance' போன்ற பணியாளர் மேலாண்மை கருவிகளை பயன்படுத்த தொடங்கி உள்ளது.

ProHance போன்ற ஒரு கருவி ஒரு ஊழியர் செயலற்ற நிலையில் இருக்கும் நேரத்தைக் கண்காணிக்கிறது.

ஊழியர் பணியாற்றும் ஆபீஸ் கணினிகளில், மவுஸ் அல்லது கீ போர்டை 5 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், ஊழியர் செயலற்று உள்ளதாக கருதப்படுகிறார். 15 நிமிடங்களுக்கு மேல் செயலற்ற நிலையில் இருந்தால், ஊழியர் மற்ற வேலைகளில் பிஸியாக இருப்பதாக கருதப்படுகிறார்.

இந்த கண்காணிப்பு அமைப்பு ஒவ்வொரு டீமுக்கும் வித்தியாசமாக இருக்கும். இந்த செயல்முறை விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, இந்த கண்காணிப்பு தரவு, ஊழியர் செயல்திறனை மதிப்பிடவும், பதவி உயர்வு மற்றும் போனஸ் போன்ற விஷயங்களை தீர்மானிக்க பயன்படுத்தப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளது.  

Tags:    

Similar News