இந்தியா
எரிபொருள் கசிவு: அவசரமாக வாரணாசியில் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
- கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றது.
- நடுவானில் பறந்த போது எரிபொருள் கசிவு ஏற்பட்டதாக சந்தேகம்.
கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு இண்டிகோ 6E-6961 விமானம் 166 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
டெக்னிக்கல் பிரச்சினை (எரிபொருள் கசிவு) சந்தேகத்தில் விமானி, விமானத்தை உடனடியாக தரையிறக்க முடிவு செய்தார். அதன்படி ஏடிசி-யிடம் வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.
ஏடிசி அனுமதி வழங்க விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் பயணம் செய்த 166 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பின்னர், ஸ்ரீநகர் செல்ல பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்து கொடுத்தது.