உலகளவிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் இந்தியாவின் UPI முதலிடம்
- இந்தியாவின் யுபிஐயில் 2024-25 நிதியாண்டில் 12,930 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.
- இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறை உலகளவில் 49% பங்கைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யு.பி.ஐ. என்கிற (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.
நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.மேலும் இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையாக யு.பி.ஐ. உள்ளது.
இந்நிலையில் உலகளவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறை முதலிடம் பிடித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
2024-25 நிதியாண்டில் 12,930 கோடி பரிவர்த்தனைகளுடன் இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முதலிடமும், 3,740 கோடி பரிவர்த்தனைகளுடன் பிரேசில் 2ம் இடமும் பிடித்துள்ளன.
மேலும், உலகளவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில், இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை முறை 49% பங்கைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.