இந்தியா

ஆந்திராவில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக பால் கொடுக்கும் பசு- தினமும் 6 லிட்டர் கறக்கிறது

Update: 2022-06-24 09:08 GMT
  • கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9 ஆயிரம் கொடுத்து சினைபசுமாடு ஒன்றை வாங்கி வந்தனர்.
  • இவர்கள் வாங்கி வந்த பசு சில நாட்களில் கன்று ஈன்றது. அன்று முதல் இன்று வரை 11 ஆண்டுகளாக பசு காலை, மாலை என இரு வேளையும் தினமும் 6 லிட்டர் பால் கொடுத்து வருகிறது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மண்டலத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி. விவசாயி. இவரது மனைவி லட்சுமி தேவி.

இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9 ஆயிரம் கொடுத்து சினைபசுமாடு ஒன்றை வாங்கி வந்தனர். இவர்கள் வாங்கி வந்த பசு சில நாட்களில் கன்று ஈன்றது. அன்று முதல் இன்று வரை 11 ஆண்டுகளாக பசு காலை, மாலை என இரு வேளையும் தினமும் 6 லிட்டர் பால் கொடுத்து வருகிறது.

பொதுவாக கன்று ஈனும் பசுக்கள் 1 முதல் 1½ ஆண்டுகள் மட்டுமே பால் கொடுப்பது வழக்கம். 11 ஆண்டுகளாக பால் கொடுக்கும் பசுவை வெங்கடசாமி லட்சுமிதேவி தம்பதியினர் தங்களது வீட்டிற்கு வந்த மகாலட்சுமியாக நினைத்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகின்றனர்.

இந்த பசுவை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Tags:    

Similar News