இந்தியா

கேரள பாதிரியார் கார்டினலாக நியமிக்கப்பட்டது இந்தியாவுக்கு பெருமை: பிரதமர் அலுவலகம்

Published On 2024-12-08 03:23 IST   |   Update On 2024-12-08 12:12:00 IST
  • கேரள பாதிரியார் ஒருவர் மதிப்புமிக்க கார்டினலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க மத்திய மந்திரி தலைமையில் ஒரு குழு வாடிகன் சென்றது.

புதுடெல்லி:

உலகம் முழுவதும் கத்தோலிக்க தலைமை குருவாக போற்றப்படுபவர் போப் பிரான்சிஸ். இவருக்கு ஆலோசனை கூறவும், கத்தோலிக்க சமய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதிலும் கார்டினல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. போப் தேர்வில் ஓட்டு போடும் தகுதியும் கார்டினல்களுக்கு உண்டு. பல்வேறு மறை மாவட்டத்திற்கு தலைமையாக கார்டினல் செயல்படுவார்.

உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கார்டினல்கள் தேர்வு செய்யப்பட்டு போப்பால் நியமனம் செய்து உத்தரவிடப்படும்.

இதற்கிடையே, இந்த கார்டினல் பொறுப்பில் இந்தியாவில் இருந்து கேரளாவின் செங்கனாச்சேரியைச் சேர்ந்த மான்சிக்னார் ஜார்ஜ் ஜேக்கப் கோவாகாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இந்திய குழுவினர் செல்ல மத்திய மீன்வளத்துறை மந்திரி ஜார்ஜ் குரியன் தலைமையில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குனில் சுரேஷ், ராஜ்யசபா எம்.பி சதம்சிங் சாந்து, பாஜ., வை சேர்ந்த அனில் ஆண்டனி, அனூப் ஆண்டனி, தாம் வடக்கன், ஆகியோர் வாடிகன் சென்றுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பேராயர் ஜார்ஜ் கூவக்காட் கார்டினலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது இந்தியாவுக்குப் பெருமை அளிக்கும் விஷயமாகும் என பதிவிட்டுள்ளது.

Tags:    

Similar News