இந்தியா

டெல்லி விமான நிலையத்தில் உற்சாக நடனமாடிய ஐ.எம்.எப். தலைவர்

Published On 2023-09-08 20:20 GMT   |   Update On 2023-09-09 19:29 GMT
  • ஜி20 மாநாட்டில் பங்கேற்க சர்வதேச நிதியத்தின் தலைவர் டெல்லி வந்தார்.
  • ஒடிசா கிராமிய கலைஞர்களின் நடனத்தை ரசித்த அவர் தானும் நடனமாடி மகிழ்ந்தார்.

புதுடெல்லி:

ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஜி20 மாநாடு தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் உள்ள பாரத மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்குகிறது. நேற்று முதல் ஜி20 உறுப்புநாடுகளின் தலைவர்கள் டெல்லி விமான நிலையம் வந்திறங்கினர்.

இந்நிலையில், ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டினா ஜியார்ஜிவாவும் டெல்லி பாலம் விமான நிலையம் வந்திறங்கினார்.

தலைவர்களை வரவேற்பதற்காக விமான நிலைய அரங்கில் ஒடிசா கிராமிய கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்து ரசித்த கிறிஸ்டினா ஜியார்ஜிவா, தன்னை மறந்து அவர்களைப் போல் நடனமாடி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Tags:    

Similar News