சிறந்த உணவு பட்டியல்- உலக அளவில் 10-வது இடம் பிடித்த ஐதராபாத் பிரியாணி
- ‘2025-ம் ஆண்டின் உலகின் சிறந்த அரிசி உணவுகள் பட்டியல்’ என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இந்தப் பட்டியலில் பெரும்பாலானவை ஜப்பானிய உணவு வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத் பிரியாணி உலகின் சிறந்த அரிசி உணவுகளில் 10-வது இடம்பிடித்துள்ளது. ஆன்லைன் பயண வழிகாட்டியான டேஸ்ட் அட்லஸ், '2025-ம் ஆண்டின் உலகின் சிறந்த அரிசி உணவுகள் பட்டியல்' என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் ஐதராபாத் பிரியாணி 10-வது இடத்தைப் பிடித்தது மட்டுமல்லாமல், இந்தப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 50 உணவுகளில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய உணவாகும்.
சமையல்காரர்கள் மற்றும் உணவு விமர்சகர்களின் மதிப்புரைகள் மற்றும் பயணிகள் வழங்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் ஐதராபாத் பிரியாணி முதல் 10 அரிசி உணவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தப் பட்டியலில் பெரும்பாலானவை ஜப்பானிய உணவு வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் 10 இடங்களில் உள்ள முதல் 3 உணவுகளான நெகிடோடோன், சுஷி மற்றும் கைசென்டன் ஆகியவை ஜப்பானிய உணவு வகைகள் இந்தியாவில், லக்னோ, காஷ்மீரி, கொல்கத்தா உட்பட வெவ்வேறு பகுதிகளுக்கு ஏற்றவாறு சிறப்பு பிரியாணிகள் உள்ளன, ஆனால் ஐதராபாத் பிரியாணி முன்னணியில் உள்ளது.