இந்தியா

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் உணவில் மனித விரல் நகங்கள்- அபராதம் விதித்தது ஐஆர்சிடிசி

Published On 2023-07-13 14:51 GMT   |   Update On 2023-07-13 14:51 GMT
  • ரெயில்வேயில் பயணிகளுக்கு நல்ல உணவு வழங்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய குழு நியமனம்.
  • ஐஆர்சிடிசி எடுத்த நடவடிக்கையால் பயணிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல உணவு கிடைக்கும்.

மும்பை- கோவா இடையேயான சிஎஸ்எம்டி- மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயணிக்கு வழங்கிய உணவில் மனித விரல் நகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வீடியோ எடுத்த பயணி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ரெயில்வே அளிக்கும் உணவின் தரத்தால் பாதிக்கப்பட்டதாக பலரும் தங்களின் மோசமான அனுபவத்தை பகிர்ந்தனர்.

இதுகுறித்து இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்திற்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட கேட்டரிங் ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தது.

மேலும் இதுதொடர்பாக, ஐஆர்சிடிசி கூறுகையில், "ரெயில்வேயில் பயணிகளுக்கு நல்ல உணவு வழங்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சில நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன. இதில் அதிகாரி ஒருவர் வந்தே பாரத் விரைவு ரெயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த முறை ஐஆர்சிடிசி ரத்னகிரியில் உள்ள கிச்சனை முழுமையாக சோதனை செய்தது.

ஐஆர்சிடிசி எடுத்த நடவடிக்கையால் பயணிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல உணவு கிடைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தது.

Tags:    

Similar News