இந்தியா

மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்

Published On 2025-04-17 18:22 IST   |   Update On 2025-04-17 18:22:00 IST
  • மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயம்.
  • வரும் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 5 வகுப்பு வரை இந்தி ஆவது கட்டாய மொழியாகும்.

மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதால் மராத்தி, ஆங்கிலம் மீடியம் பள்ளிகளில் 3ஆவதாக இந்தி கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கில மீடியம் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை மராத்தி மற்றும் ஆங்கிலம் கட்டாயமாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இனிமேல் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி 3ஆவது கட்டாய மொழியாக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் இருந்து நடைமுறை படுத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையின்படி புதிய பாடத்திட்டம் 1ஆம் வகுப்பில் 2025-2026-ல் அமல்படுத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2, 3, 4 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு தேசிய கல்விக் கொள்கை 2026-27-ல் அமல்படுத்தப்படும். 5, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு 2027-28 முதல் அமல்படுத்தப்படும். 8, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 2028-29ஆம் ஆண்டில் இருந்து அல்படுத்தப்படும்.

இந்த நடவடிக்கை இந்தி திணிப்பாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Tags:    

Similar News