இந்தியா

கனமழைக்கு மத்தியில் ஆன்லைனில் நடந்த திருமணம்

Published On 2023-07-13 04:08 GMT   |   Update On 2023-07-13 04:08 GMT
  • கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக திருமண ஏற்பாடுகளை சரிவர செய்ய முடியவில்லை.
  • இரு வீட்டாரும் கலந்து பேசி வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு ஜோடிக்கு ஆன்லைன் மூலம் திருமணம் நடைபெற்றது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்லாவில் உள்ள கோட்கர் பகுதியை சேர்ந்த ஆஷிஷ் சிம்ஹா என்ற வாலிபருக்கும் குலு பகுதியை சேர்ந்த ஷிவானி தாக்கூர் என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை நடைபெற இருந்தது.

இந்நிலையில் அங்கு பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக திருமண ஏற்பாடுகளை சரிவர செய்ய முடியவில்லை. இதையடுத்து இரு வீட்டாரும் கலந்து பேசி வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

இதற்கு மணமக்களும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து ஆன்லைன் மூலமாக திருமணம் நடைபெற்றது. ஒரு பாதிரியார் உதவியுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர். அப்போது திருமண பந்தத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து வழக்கமான சடங்குகளும் ஆன்லைன் மூலமாக உண்மையாக நடத்தப்பட்டது. இந்த திருமணம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் மணமக்களை வாழ்த்தி பதிவிட்டனர்.

Tags:    

Similar News