இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால்,சி.ஆர்.பாட்டீல்

டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை எதிரொலி- கெஜ்ரிவால் மத விரோதி என பாஜக கடும் தாக்கு

Published On 2022-10-24 01:18 IST   |   Update On 2022-10-24 01:18:00 IST
  • கெஜ்ரிவால் குஜராத்திற்கு வந்தால் பிறகு எப்படி நீங்கள் பட்டாசு வெடிப்பீர்கள்?
  • பண்டிகை கொண்டாடுவதைத் தடுப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

ராஜ்கோட்:

தேசிய தலைநகரான டெல்லியில் பசுமைப் பட்டாசு உள்பட அனைத்து வகை பட்டாசுகளின் உற்பத்தி விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீண்டும் கடந்த மாதம் தடை விதித்தது. டெல்லியில் இன்று தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய் அண்மையில் அறிவித்தார்.

பட்டாசுகளை சேமித்தல் மற்றும் விற்பனை செய்தால் ரூ. 5,000 வரை அபராதம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல், கூறியதாவது:

டெல்லி முதல்வர், டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்ததாக செய்திகளைப் படித்தேன். அந்த சகோதரர் இங்கு (குஜராத்) நடைபெறும் தேர்தலுக்கு வர முயற்சிக்கிறார். பிறகு எப்படி நீங்கள் பட்டாசு வெடிப்பீர்கள்? எனவே பட்டாசு வெடித்து எங்கள் பண்டிகைகளை கொண்டாடுவதைத் தடுப்பவர்களை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தீபாவளியன்று மட்டும் டெல்லியில் மக்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் பட்டாசு வெடிக்க முதல்வர் கெஜ்ரிவால் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக எம்பி மனோஜ் திவாரி கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News