இந்தியா

குஜராத் புறநகர் ரெயிலில் திடீர் தீ விபத்து - அலறியடித்து ஓடிய பயணிகளால் பரபரப்பு

Published On 2023-04-18 02:44 IST   |   Update On 2023-04-18 02:44:00 IST
  • குஜராத்தின் போதட் ரெயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட புறநகர் ரெயிலில் தீப்பிடித்தது.
  • தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் போதட் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரெயிலில் திடீரென தீப்பிடித்தது. அகமதாபாத் புறப்படவிருந்த பயணிகள் ரெயில் பெட்டிகள் திடீரென தீப்பிடித்ததால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக தீயை தண்ணீர் கொண்டு அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News