500 ரூபாய் நோட்டுகளால் மாலை செய்து அணிந்த மணமகன்
- மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நோட்டுகளால் தயாரான பண மாலையை கண்ட பயனர்கள் பலரும் பிரமித்தனர்.
- வீடியோ 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 3.19 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது.
திருமணத்தின் போது ஆடம்பரமாக செலவு செய்து விருந்தினர்களை உபசரிப்பதை பார்த்திருப்போம். ஆனால் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மணமகன் ஒருவர் திருமணத்திற்காக 500 ரூபாய் நோட்டுகளை கொண்ட மாலையை அணிந்த புகைப்படம் பயனர்கள் மத்தியில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோ அரியானாவில் உள்ள குரேஷிபூர் பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் மணமகன் அணிவதற்காக 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு மிகப்பெரிய மாலை தயார் செய்துள்ளனர்.
மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நோட்டுகளால் தயாரான அந்த பண மாலையை கண்ட பயனர்கள் பலரும் பிரமித்தனர். இந்த வீடியோ 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 3.19 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. அதனை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாங்கள் இதுபற்றி வருமான வரித்துறைக்கு தெரிவிப்போம் என ஒரு பயனரும், இதை அணிந்து கொண்டு மாப்பிள்ளை எப்படி நடப்பார் என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர்.