இந்தியா

கீதா பதிப்பகத்துக்கு காந்தி விருது என்பது கோட்சே, சாவர்க்கருக்கு விருது வழங்குவது போன்றது - காங்கிரஸ்

Published On 2023-06-20 02:14 IST   |   Update On 2023-06-20 02:14:00 IST
  • காந்தி அமைதி விருதுக்கு உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த காந்தி அமைதி விருதுடன் ஒரு கோடி ரூபாய் பணம், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது.

லக்னோ:

இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்ட மகாத்மா காந்தியடிகளின் 125-வது பிறந்த நாளான 1995-ம் ஆண்டு இந்திய அரசு அவரது பெயரில் காந்தி அமைதி விருது வழங்குவது என முடிவு செய்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கி வருகிறது

காந்தி அமைதி விருது 1 கோடி ரூபாய் பணம், சான்றிதழ், பதக்கம் மற்றும் தறியில் நெய்த பாரம்பரிய துணி, கைவினைப் பொருட்களை கொண்டது ஆகும்.

2021-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுக்கு உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கீதா பிரஸ் பதிப்பகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பதிப்பகங்களில் ஒன்றான இந்த பதிப்பகம் பகவத் கீதை உள்ளிட்ட இந்து ஆன்மிக நூல்களை வெளியிட்டு வருகிறது. இது கடந்த 1923-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்நிலையில், கீதா பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது வழங்கப்படுவது கேலிக்கூத்து என கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், இது கோட்சே, சாவர்க்கருக்கு விருது வழங்குவது போன்றது என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே வார்த்தை மோதலும் வெடித்துள்ளது.

இதற்கிடையே, நன்கொடை வாங்குவதில்லை என்ற தங்கள் கொள்கையின் காரணமாக 1 கோடி ரூபாய் பணப்பரிசை ஏற்பதில்லை என கீதா பதிப்பகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News