இந்தியா

ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது: உலகத் தலைவர்களை வரவேற்ற பின் பிரதமர் மோடி உரை

Published On 2023-09-09 10:57 IST   |   Update On 2023-09-09 10:57:00 IST
  • உலகத் தலைவர்கள் அனைவரையும் வரவேற்ற பின், மோடி உரையாற்றினார்
  • மாநாடு தொடங்கியதும் மொரோக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக பிரதமர் மோடி 9 மணியளவில் பாரத் மண்டபம் வந்தடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார். மாநாடு நடைபெறும் மண்டபத்தை பார்வையிட்டார்.

உலகத் தலைவர்கள் பாரத் மண்டபத்திற்கு வரத் தொடங்கினர். அவர்களை பிரதமர் மோடி சிகப்பு கம்பளத்தில் நின்றவாறு வரவேற்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உலக சுகாதார அமைப்பு தலைவர், சீன பிரதமர், பிரேசில் பிரதமர் உள்ளிட்ட உலக தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.

பின்னர் அவர் உரையாற்றினார். உரையாற்றும் முன் மொரோக்கோவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க விரும்புகிறேன், காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய நாம் பிரார்த்திப்போம் என்றார். மேலும், இந்தியா அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றினார்.

Tags:    

Similar News