இந்தியா

மகாராஷ்டிரா- சத்தீஸ்கர் எல்லையில் 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

Published On 2025-05-23 16:01 IST   |   Update On 2025-05-23 16:01:00 IST
  • நக்சலைட்டுகளை முற்றிலும் அழிக்க மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது.
  • சத்தீஸ்கரில் 27 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா எல்லையில் தற்போது 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா- சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்துள்ள மகராஷ்டிராவின் கிழக்கு மாவட்டமான கட்சிரோலியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

கட்சிரோலி மாவட்டத்தின் கவாண்டே பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக நம்பத்தகுந்த ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸ் சிறப்பு கமாண்டோ குழு சி-60 மற்றும் சிஆர்பிஃஎப் வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மதியத்தில் இருந்து வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கனமழை பெய்த போதிலும் 300 போலீசார் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் கவாண்டே மற்றும் நெல்குண்டாவில் இருந்து இந்திராவதி ஆற்றங்கரையோரம் வரை இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இன்று காலை ஆற்றங்கரையோரத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபடும்போது மறைந்திருந்த நக்சலைட்டுகள் போலீசார் மற்றும் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு போலீசார் மற்றும் சிஆர்பிஆஃப் வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

இரண்டு மணி நேரத்திற்கு மேலான நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

அத்துடன் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். சத்தீஸ்கரின் பெசவராஜு என்ற நக்சலைட் தலைவர் உள்பட 27 பேர் சில தினங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா- சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

Tags:    

Similar News