இந்தியா

அல்-கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடி கைது.. சதித்திட்டம் முறியடிப்பு!

Published On 2025-07-24 02:00 IST   |   Update On 2025-07-24 02:01:00 IST
  • அவர்கள் அனைவரும் 20-25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
  • சமூக ஊடகங்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தனர்.

அல்-கொய்தா பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் குஜராத் பயங்கரவாதிகள் தடுப்பு படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் டெல்லியிலும், மற்றொருவர் நொய்டாவிலும், மேலும் இருவர் குஜராத்தில் அகமதாபாத் மற்றும் மொடாசாவிலும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் முகமது ஃபைக், முகமது ஃபர்தீன், சைஃபுல் குரேஷி மற்றும் ஜீஷான் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 20-25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

அவர்கள், நாட்டில் பெரிய சதித்திட்டங்களைத் திட்டமிட்டு வந்ததாக குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News