இந்தியா

முன்னாள் மத்திய மந்திரி கிரிஜா வியாஸ் மறைவு

Published On 2025-05-02 00:26 IST   |   Update On 2025-05-02 00:26:00 IST
  • கிரிஜா வியாசின் இறுதிச்சடங்கு உதய்ப்பூரில் நடக்கிறது.
  • அவரது மறைவுக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்தார்.

ஜெய்ப்பூர்:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கிரிஜா வியாஸ் (79), ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் வசித்து வந்துள்ளார்.

கடந்த மார்ச் 31-ம் தேதி நடந்த ஆரத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அவருடைய துப்பட்டாவில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால், அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உதய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் பின்பு, அகமதாபாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், ஒருமாத கால சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருடைய இறுதிச்சடங்கு உதய்ப்பூரில் நடக்கிறது. அவரது மறைவுக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல் மந்திரி பஜன்லால் சர்மா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

Tags:    

Similar News