பஞ்சாபை புரட்டிப்போட்ட வெள்ளம்.. மக்களின் நிலை கண்டு கண்ணீர் விட்டு அழுத பகவந்த் மான் - வீடியோ
- படகு மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.
- உணர்ச்சிவசப்பட்ட பகவந்த் மான் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
கனமழை மற்றும் வெள்ளத்தால் பஞ்சாப் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கட்டி ராஜோ கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.
படகு மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.
இதன்போது உள்ளூர் கிராம மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதன்போது ஒரு வயதான பெண்மணி தனது துயரத்தைப் பகிர்ந்து கையெடுத்து வணங்கிறார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட பகவந்த் மான் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து ஆராய்ந்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அரசாங்கம் முழு இழப்பீடு வழங்கும் என்று பகவந்த் மான் உறுதியளித்தார்.