இந்தியா

முதல் 24 மணி நேரம் கடினமாக இருந்தது: மீட்கப்பட்ட தொழிலாளர் பேட்டி

Published On 2023-11-29 04:01 GMT   |   Update On 2023-11-29 04:01 GMT
  • 17 நாட்களுக்குப் பிறகு 41 தொழிலாளர்கள் நேற்றிரவு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
  • கடைசி 12 மீட்டர் தூரம் கைகளால் தோண்டப்பட்டு மீட்புக்குழுவினர் தொழிலாளர்களை சென்றடைந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள், நிலச்சரிவு காரணமாக சிக்கிக்கொண்டனர். சுமார் 17 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 41 தொழிலாளர்களும் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

இருந்தபோதிலும், மருத்துவ பரிசோதனைக்காக சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை பிரதமர் பிரமர் மோடி டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களில் சுபோத் குமார் வர்மா என்ற இளைஞரும் ஒருவர். அவர் சுரங்கபாதைக்குள் சிக்கியது குறித்து கூறுகையில் "முதல் 24 மணி நேரம் மிகக் கடுமையாக இருந்தது. அதன்பின் குழாய் மூலம் எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது, தற்போது நான் முற்றிலும் நலமாக இருக்கும். எனது உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கிறது.

எங்கள் 41 பேரையும் பத்திரமாக மீட்க முயற்சி மேற்கொண்ட மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதற்கிடையே மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பண உதவி நிதி வழங்கப்படும். சில்க்யாரா சுரங்கப்பாதை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என உத்தரகாண்ட் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News