இந்தியா

காஷ்மீரில் 37 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

Published On 2023-02-04 06:34 IST   |   Update On 2023-02-04 06:34:00 IST
  • 20 பேர் மீது கடந்த நவம்பர் மாதம் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
  • இந்த சோதனை நடவடிக்கை காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதுடெல்லி :

காஷ்மீர் அரசின் நிதித்துறையில் கணக்கு உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஏப்ரல் 21-ந்தேதி வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இடைத்தரகர்கள் உள்பட 20 பேர் மீது கடந்த நவம்பர் மாதம் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் நேற்று காஷ்மீரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக இடைத்தரகர்கள் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்தது.

உதம்பூர், ராஜபுரி, தோடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைத்தரகர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான 37 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை நடவடிக்கை காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News