இந்தியா

ஆந்திராவில் ரூ.10-க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி

Published On 2025-07-24 10:39 IST   |   Update On 2025-07-24 11:06:00 IST

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம், தெந்துலூரு பகுதியை சேர்ந்தவர் சிவாஜி. விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்.

    நகரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சுற்றுப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். அலுவலகங்களுக்கு வந்து செல்பவர்கள் உணவு கிடைக்காமல் செல்வதை கண்டார்.

    இதனால்மக்களின் பசியை போக்க சிவாஜி முடிவு செய்தார்அதன்படி தனது நிலத்தில் இயற்கை முறையில் விளைவித்த அரிசி மற்றும் காய்கறிகளைக் கொண்டு வெஜ் பிரியாணி சமைத்து ரூ. 5-க்கு வழங்கி வந்தார்.

    அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரமாக 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கி வருகிறார். 10- ரூபாய்க்கு சுவையான வெஜ் பிரியாணி வழங்குவதால் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் உணவு வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர்.

    Tags:    

    Similar News