இந்தியா

குடும்பத்துக்கு கெட்ட பெயர்.. 19 வயது பெண்ணின் தலை துண்டிப்பு - ஆணவக்கொலை வழக்கில் குடும்பம் கைது

Published On 2025-08-14 21:31 IST   |   Update On 2025-08-14 21:31:00 IST
  • இவர்களுக்கு தமன்னா, நிஷா என்ற மகள்கள் உள்ளனர்.
  • மூத்தவரான மாமனாரின் ஆலோசனைக்கு இணங்க கொலை செய்ய முடிவாகியது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது மகளை குடும்பமே சேர்ந்து ஆணவக்கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி சதாபாத் பகுதியில் உள்ள பாரதோய் கிராமத்தில் இளம்பெண்ணின் தலையில்லாத உடல் ஒன்று கால்வாய் அருகில் சாக்கில் கண்டுபிடிக்கப்ட்டது.

இதுதொடர்பாக விசாரிக்க 5 குழுக்களை போலீஸ் அமைத்தது. பெண் உடலில் இருந்த அடையாளங்களை போலீசார் சமுக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

தையல்கார பெண் ஒருவர் தான் தைத்த துணி இளம்பெண்ணின் உடலில் இருந்ததை அடையாளம் கண்டு போலீசுக்கு தெரிவித்தார்.

அதன்படி உயிரிழந்தது அலிகாரின் தவுனா கிரமத்தை சேர்ந்த ஹஸ்ரத் அலி என்பவரின் மகள் தமன்னா (19 வயது) என்பது தெரியவந்தது.

ஹஸ்ரத் அலி 2005 இல் பிர்தவ்ஸ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு தமன்னா, நிஷா என்ற மகள்கள் உள்ளனர்.

தொடர்ந்து பெண் குழந்தைகளாக பெற்றெடுப்பதால் பிர்தவ்ஸ்-ஐ பிரிந்த அலி, ராஜா பெஹல்வான் என்பவற்றின் மகள் ராணியை மணந்தார். தமன்னாவும், நிஷாவும் அலியின் வளர்ப்பில் வளந்தனர்.

இந்நிலையில் தமன்னா அண்மையில் வாலிபர் ஒருவருடன் கிராமத்திலிருந்து நகரத்துக்கு சென்று 2 நாள் கழித்து திரும்பினார். இவ்வாறு தமன்னா ஊர்சுற்றுவது குடும்பத்துக்கு அவமானம் என தந்தை அலி, வளர்ப்பு தாய் ராணி கண்டித்துள்ளனர்.

இருப்பினும் தமன்னா அந்த இளைஞருடன் கடந்த 8 ஆம் தேதி பைக்கில் சென்றுள்ளார். அப்போது பாலத்தில் வைத்து அவர்களை மரித்த அலி, தமன்னாவை தன்னுடன் அழைத்துக்கொண்டு மாமனார் ராஜா பெஹ்லவான் வீட்டுக்கு அழைத்துச்சென்றார்.

அங்கு மூத்தவரான மாமனாரின் ஆலோசனைக்கு இணங்க கொலை செய்ய முடிவாகியது.  தமன்னாவுக்கு உணவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.

பின்னர் மனைவி ராணி உள்ளிட்டவர்களின் தமன்னாவை பிடித்துக்கொள்ள தந்தை அலி தமன்னாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். 

பின்னர் உடலை கால்வாய்க்கு எடுத்துசென்று, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தலையை துண்டித்து, உடலில் பல காயங்களை ஏற்படுத்தி சாக்கில் கட்டி வீசியுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அலி, ராணி, ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

Similar News