இந்தியா

மணிப்பூர் கலவரம் எதிரொலி - இணைய சேவை துண்டிப்பு வரும் 30-ம் தேதி வரை நீட்டிப்பு

Published On 2023-06-25 17:56 IST   |   Update On 2023-06-25 17:56:00 IST
  • மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
  • கலவரம் எதிரொலியால், மணிப்பூரில் இணைய சேவை தடை வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

மணிப்பூர்:

மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு இணைய சேவையை முடக்கி வருகிறது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஒரு மாத காலத்துக்கும் மேலாக இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கும் வகையில் மணிப்பூரில் இணைய சேவை தடை ஜூன் 30-ம் தேதி மாலை 3 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News