இந்தியா

தேர்வு பேப்பர் லீக் வழக்கு: 23 வருடத்திற்குப் பிறகு முன்னாள் ரெயில்வே ஊழியர்களுக்கு 5 வருடம் சிறைத் தண்டனை

Published On 2025-07-21 21:30 IST   |   Update On 2025-07-21 21:30:00 IST
  • 2002ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
  • 2003ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி, ரெயில்வே துறையில் துணை ஸ்டேசன் மாஸ்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அப்போது அகமதாபாத், வதோதரா, ஆனந்த் ஆகிய இடங்களில் வேலைப் பார்த்து வந்த 8 அதிகாரிகள் மற்றும் தனி நபர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் வரை பெற்றுக்கொண்டு தேர்வு பேப்பரை லீக் செய்தது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

விசாரணையைத் தொடர்ந்து சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு இன்று நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. மேலும், ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டவர்களில் தனி நபர் விசாணைக் காலத்தில் உயிரிழந்துவிட்டார். தேர்வு பேப்பர் லீக் வழங்கில் 23 வருடத்திற்குப் பிறகு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

Tags:    

Similar News