இந்தியா

மகனின் திருமணம் போல் பீகார் தேர்தலில் பிசியாக இருக்கிறார் பிரதமர் மோடி: கார்கே

Published On 2025-11-03 16:11 IST   |   Update On 2025-11-03 16:12:00 IST
  • மனு ஸ்மிரிதியை நம்பும் பாஜக-வின் மடியில் அமர்ந்து கொண்டிருக்கிறார் நிதிஷ் குமார்.
  • ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர லோஹியா, கர்பூரி தாகூர் ஆகியோரை கைவிட்டுவிட்டார்.

காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதன்முறையாக பீகாரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராஜா பகாரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மனு ஸ்மிரிதியை நம்பும் பாஜக-வின் மடியில் அமர்ந்து கொண்டிருக்கிறார் நிதிஷ் குமார். ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா, கர்பூரி தாகூர் ஆகியோரை கைவிட்டுவிட்டார்.

அவரால் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகப் போராட முடியாது. தேர்தலுக்குப் பிறகு பாஜக அவரை முதல்வராக ஆக்கப்போவதில்லை என்பதை நிதிஷ் குமார் அறிந்திருக்கவில்லை. அவருக்குப் பதிலாக பாஜக-வைச் சேர்ந்த சில Chela (Foot Soldier)-க்களுக்கு பதவியை கொடுக்கும்.

பிரதமருக்கு உலகைச் சுற்றிப் பார்க்க நேரம் இருக்கிறது. ஆனால் சொந்த நாட்டில் உள்ள மாநிலங்களில் பிரச்சினைகளை பார்க்க நேரமில்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே தென்படுகிறார். மாநகராட்சி தேர்தலில் கூட தெருக்களில் பிரதமர் மோடி கர்ஜிப்பதை உங்களால் பார்க்க முடியும். பீகார் தேர்தலில் மகனின் திருமணம் போல் பிசியாக இருக்கிறார்.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

Tags:    

Similar News