null
ஈரோடு கிழக்கு மற்றும் டெல்லி தேர்தல் வாக்குப்பதிவு
- 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
- டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதோடு அயோத்தியின் மில்கிபூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதே போல் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 46.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரப்படி 53.63 % வாக்குகள் பதிவு.
உத்தர பிரதேச மாநிலம் மில்கிபூர் தொகுதியில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44.59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 33.3 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி காலை முதலே வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
டெல்லி சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19.95 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. வடகிழக்கு மாவட்டம் 24.87 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.95% வாக்குகள் பதிவு
காலை 9 மணி நிலவரப்படி டெல்லியில் 8.10 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது