இந்தியா

ஜனாதிபதி திரவுபதி முர்மு

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Published On 2022-07-29 00:47 IST   |   Update On 2022-07-29 00:47:00 IST
  • காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
  • ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா காயத்தால் விலகியுள்ளார்.

புதுடெல்லி:

22-வது காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 8 -ம் தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

இதில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, வேல்ஸ், கென்யா, நைஜீரியா உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

நீச்சல், தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஆக்கி, மல்யுத்தம், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக் உள்பட 20 விளையாட்டுகள் 280 பிரிவுகளில் நடக்கிறது.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 111 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொள்கிறார்கள்.

தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், (மகளிர்), சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஆக்கி, ஜூடோ, லான் பவுல்ஸ், பாரா பவர்லிப்டிங், ஸ்குவாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், பளு தூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.

பி.வி சிந்து , மீராபாய் சானு, ரவி தஹியா , மாணிக் பத்ரா, லவ்லினா, நிகத் ஜரின் உள்ளிட்டோர் பதக்கம் வெல்வார்கள் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News