இந்தியா

கொலை செய்யப்பட்ட நவீன்

ஆபாச தகவல் அனுப்பி தொல்லை- காதலியின் முன்னாள் காதலனை கொலை செய்த என்ஜினீயர் மாணவர்

Published On 2023-02-26 14:38 IST   |   Update On 2023-02-26 14:38:00 IST
  • நவீன் செல்போனில் தொல்லை கொடுக்கும் விவகாரத்தை இளம்பெண் ஹரிகிருஷ்ணாவிடம் தெரிவித்தார்.
  • வீட்டில் இருந்து வெளியே சென்ற தங்களது மகன் 3 நாட்களாக வீடு திரும்பாததால் இதுகுறித்து போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், நாகர் கர்ணூல் மாவட்டம், கோட்ர தாண்டா பகுதியை சேர்ந்தவர் நவீன். இவர் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இவரது நண்பர் ஹரி கிருஷ்ணா. இவர் பீர்காதி குடாவலாவில் உள்ள அரோரா என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் இன்டர் மீடியட் வரை ஒன்றாக படித்தனர்.

அப்போது அவர்களுடன் படித்த மாணவியை 2 பேரும் காதலித்தனர். ஆனால் மாணவியிடம் முதலில் நவீன் தனது காதலை தெரிவித்தார். நவீனின் காதலை ஏற்றுக்கொண்ட மாணவி அவருடன் பழகி வந்தார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

பின்னர் இருவரும் வெவ்வேறு கல்லூரியில் படித்து வந்தாலும் அடிக்கடி சந்தித்து நட்பாக பழகி வந்தனர்.

இந்த நிலையில் இளம்பெண், ஹரிகிருஷ்ணா இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் 2 பேரும் ஒன்றாக பழகி வந்தனர். பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இது நவீனுக்கு தெரியவந்தது. தனது முன்னாள் காதலி நண்பனுடன் சுற்றி திரிவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் தனது முன்னாள் காதலியான மாணவிக்கு செல்போனில் ஆபாச தகவல்கள் அனுப்பி தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவி இதனை கண்டித்தும் அவர் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்தார்.

நவீன் செல்போனில் தொல்லை கொடுக்கும் விவகாரத்தை இளம்பெண் ஹரிகிருஷ்ணாவிடம் தெரிவித்தார். இதனால் ஹரி கிருஷ்ணாவிற்கு நவீன் மீது ஆத்திரம் ஏற்பட்டது. நவீனை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 3 மாதங்களாக அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

கடந்த 17-ந்தேதி நவீனுக்கு போன் செய்து மது அருந்த போகலாம் என அழைத்தார். இதையடுத்து ஹரிகிருஷ்ணாவும் நவீனும் சேர்ந்து அப்துல்லாபூர் புறநகர் சுற்றுசாலை பகுதிக்கு சென்றனர். அங்கு இருவரும் சேர்ந்து மது குடித்தனர்.

நவீனுக்கு போதை தலைக்கு ஏறியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று எண்ணிய ஹரிகிருஷ்ணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவீனின் தலையை அறுத்து துண்டித்தார். இதில் துடிதுடித்து அவர் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அவரது இதயத்தை கிழித்து வெளியே எடுத்தார். மர்ம உறுப்பை அறுத்து வீசினார். கைவிரல்களை துண்டித்தார். நவீனை கொலை செய்யும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.

நவீனின் இதயம், மர்ம உறுப்பு, கைவிரலை வெட்டும் காட்சியை காதலியின் செல்போனுக்கு அனுப்பினார்.

மேலும் நவீனை தலை துண்டித்து கொலை செய்த காட்சிகளையும் அவருக்கு வீடியோவாக அனுப்பினார். பின்னர் நவீன் உடலை முட்புதரில் வீசிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற தங்களது மகன் 3 நாட்களாக வீடு திரும்பாததால் இதுகுறித்து போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன் யார் யாருடன் செல்போனில் பேசினார் என்ற விவரங்களை சேகரித்தனர்.

நவீன் கொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்துவதை அறிந்த ஹரிகிருஷ்ணா போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். போலீசார் ஹரிகிருஷ்ணாவை கைது செய்து இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News